உழைக்கும் சூழல்

பெறுமதிகள் மற்றும் கலாசாரம

எம்மை வேறுபடுத்துவது எமது கலாசாரம் மற்றும் பெறுமதிகள் என்பனவேயாகும். எமது கலாசாரத்தைக் கட்டியெழுப்பி, வடிவமைப்பதில், இலங்கை, பெருமிதம் கொள்ளும் வகையில் ஒரு நிதி நிறுவனமாகத் திகழும் எமது பயணத்தில் ஒரு வழிகாட்டியாகப் பணியாற்றுவதில் பங்களிப்பு வழங்குவது ஒரு பொதுவான நோக்கமாகும்.

நிறுவனம் என்ற வகையில் வளர்ச்சி என்பது, எமது மூலோபாயத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். இது, தனி நபர்கள், எமது சகாக்கள், பெரு வணிகங்கள், கூட்டுறவுக் குழுமங்கள், பொருளாதாரங்கள் மற்றும் சமூகம் என்பன வளர்ச்சியடைவதற்கு உதவியளிக்கின்றன. நாம், புரியும் அனைத்து விடயங்களும், எமது சிந்தனைகளை வடிவமைத்தல், எமது திட்டங்களை இயக்குதல் என்பனவற்றில் வளர்ச்சியை முக்கியமாக எடுத்துக் கொள்கின்றோம். இது, வெற்றியின் அளவீடும் கலாசாரத்தின் அடிப்படையுமாகும்.

மேலும், நாம் மக்களை தனி நபர்கள் என்ற வகையில் கௌரவிக்கின்றோம். மக்கள் சாதிக்கக்கூடிய வகையில் உதவுவதில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இது, வெறுமனே கடமையை மாத்திரம் செய்வதற்கும், எதிர்பார்ப்புக்களை விஞ்சுவதற்கும் இடையிலான வித்தியாசமாகும். இதுவே நாம் இலங்கை மக்களிடமும், எமது வாடிக்கையாளர்களிடமும் எம்மை எடுத்துச் செல்வதற்குக் காரணமாகும். எமது ஆர்வத்தின் மூலம் நாம் புரியும் சகல விடயங்களையும், மறந்து விடாது, மக்கள் மனதில் கொள்வதற்கு உரிய ஒரு வலுவான கலாசாரத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும்.

ஆர்பிகோ பினான்ஸ் பிஎல்சி நிறுவனத்துடன் ஏன் இணைய வேண்டும்?

சிறந்த திறமைகளை ஈர்க்கவும், தக்கவைத்துக் கொள்ளவும், நாம் உயர்ந்த போட்டிமிக்க பொதிகளை வழங்குகின்றோம். மேலும், பன்முகப்படுத்தப்பட்ட, நட்புறவுடன் கூடிய குழுவுடன் கடமையாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றோம். ஆர்பிகோ பினான்ஸ் நிதி பிஎல்சி குழுமம், ஒரு மாறுபட்ட பணிச் சூழலை வழங்குவதோடு, வலுவான சமூக உணர்வையும், தொடர்ந்து வரும் புதிய சவால்களுக்கு உரிய சிறந்த தீர்வுகளைக் கண்டறியும் கருத்துக்களையும், நுண்ணறிவுகளையும் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒரு சூழலை உருவாக்குகிறது.

ஆர்பிகோ நிதி பிஎல்சி மூலம் உங்கள் தொழில் முன்னேற்றம் உறுதி செய்யப்படுகிறது. இங்கு நீங்கள் சவால்களை எதிர்கொள்வதோடு, பல்வேறு சூழல்கள் மற்றும் துறைகளில் உங்களை வெளிப்படுத்தக்கூடியதாக, அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கான ஏராளமான வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். எமது வாடிக்கையாளர்கள் மற்றும் கைத்தொழில் துறையின் தேவைப்பாடுகளை சந்திப்பதற்கு தேவையான திறன்களைக் கட்டியெழுப்புவதற்குரிய வகுப்பறை கற்றல் மற்றும் தொழிலுடன் போதான கற்றல் என்பன முதல் நாளில் இருந்து வழங்கப்படும்.

எமது எதிர்கால வெற்றிக்கு உங்கள் கருத்துக்கள், தனிப்பட்ட அபிப்பிராயங்கள், ஆலோசனைகள், ஆக்கச் செயற்பாடுகள் என்பன மிகவும் முக்கியமாகும். எனவே, நாம் எமது மக்களிடமுள்ள திறமைகளுக்காக அவர்களை மதிப்பதோடு, அனைவருக்கும் சம வாய்ப்புக்களை வழங்கக்கூடிய வகையில் உலகளாவிய ரீதியில் நடைமுறையிலுள்ள நியாயமான தொழில் நடைமுறைகளை ஊக்குவிக்கின்றோம்.

தற்போதைய வெற்றிடங்கள

ஆர்பிகோ நிதி நிறுவன வலைத்தளத்தின் தொழில் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நீங்கள் இந்தப் பக்கத்தைப் பார்வையிட தெரிவு செய்தமைக்காக நாம்

மகிழ்ச்சியடைகிறோம். இப்பக்கத்தை ஆராய்வதற்கு நேரத்தை ஒதுக்கி எங்களால் வழங்கக்கூடிய அற்புதமான வாய்ப்புகள் பற்றி அறிந்துகொள்வீர்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்.

ஆர்பிகோ நிதிக் கம்பனி பிஎல்சி ஒரு அறிவுபூர்வமான, சவால்மிக்க மற்றும் ஆர்வத்தை தூண்டும் பணிச்சூழலை வழங்குகின்ற ஒரு அற்புதமான நிதி நிறுவனமாகும். எமது கலாசாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அத்துடன், நாம் என்ன செய்கிறோம் என்பதில் ஆர்வமுள்ள மற்றும் செயற்திறன் மிக்க உயர் தரங்களை வழங்குவோரைத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றோம்.

ஒவ்வொரு ஊழியரும் நாளாந்தம் கடமைக்குச் சமூகமளிப்பதை உற்சாகமாக உணர்வது எமது குறிக்கோளாகும். நீங்கள் எதிர்பார்ப்பது போன்று இது அமையுமாக இருப்பின், திறந்திருக்கின்ற எமது பதவிகளை பார்த்து தங்களின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் ஆலோசனைகள், தனித்துவமான முன்னோக்குகள் மற்றும் புதுமைகள் என்பன எமது எதிர்கால வெற்றிக்கு இன்றியமையாதவை. எனவே, நாம் எமது மக்களிடமுள்ள திறன்களை மதிப்பதோடு, ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்புக்களை வழங்குகின்ற உலகளாவிய நியாயமான தொழில் நடைமுறைகளை ஊக்குவிக்கின்றோம்.

கூட்டான்மை சமூகப் பொறுப்புத் (ஊளுசு) திட்டங்கள்

ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி தனது ஊளுசு முயற்சிகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு மாறுபட்ட தேவைகள் மற்றும் குழுக்களை ஆதரிக்கின்ற பல்வேறு தேசிய மட்ட மற்றும் சமூக அளவிலான நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தியது. நாம் கல்வி, கலை மறறும் கலாசார, விளையாட்டு, சமூக அபிவிருத்தி மற்றும் கூட்டுறவு நேயம் உட்பட சமூகப் பொறுப்புத் திட்டங்களின் அனைத்து அம்சங்களையும் எமது நிலையாதார முயற்சிகள் ஊடாக மேற்கொண்டு வருகின்றோம்.