அஸோஸியேட் மோட்டர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி (AMF), ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி யின் பங்குகளில் 93.809% ஐ பெற்றுக்கொண்டு நவம்பர் 19 ஆம் திகதி கட்டாயக் கொள்வனவினை மேற்கொண்டது. AMF ஆர்பிகோ பினான்ஸ்ஸின் 40.59% பங்குகளைக் கொள்வனவு செய்து

ஆர்பிகோ பினான்ஸின் மிகப்பெரிய பங்குதாரரான அல்பின்கோ இன்சூரன்ஸ் புரோக்கர் பிறைவேட் லிமிட்டெட் இடமிருந்து ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் பங்கு ஒன்று ரூபா 166 வீதம் 501 மில்லியன் ரூபாவுக்கு AMF கொள்வனவு செய்து, தனது உரிமையை 40.59% ஆக மாற்றிக் கொண்டது. பின்னர் இது 41.33% வரை அதிகரித்தது. ஒக்டோபர் 02 ஆம் திகதி எஞ்சியிருந்த பிரதான பங்குடைமையாளர்களான அலையன்ஸ் பினான்ஸ் கம்பனி பிஎல்சி மற்றும் டவி இன்வெஸ்ட்மன்ட் டிரஸ்ட் பிரைவேட் லிமிட்டெட் ஆகியன முறையே தமது உரிமைப்பங்குகளான 19.53% மற்றும் 10.10% ஐ AMF க்கு விற்பனை செய்தது.

ஒக்டோபர் 24 ஆம் திகதி, வழங்கல் ஆவணம் பங்குரிமையாளர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன் போது, ஆர்பிகோ பினான்ஸின் 71.16% பங்குகளை AMF கொண்டிருந்தது.

குறித்த வழங்கல் காலப்பகுதியில், AMF 22.58% பங்குகளைப் பூர்த்தி செய்த மற்றும் பூர்த்தி செய்யப்படாத கொடுக்கல் வாங்கல்கள் மூலம் பெற்றுக்கொண்டதோடு, 0.069% பங்குகள் கொழும்பு பங்குச்சந்தையின் விநியோகப் பிரிவினால் பெற்றுக் கொள்ளப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் நிதி நிறுவனங்கள் ஒன்றிணைப்புத் திட்டத்தின் அடிப்படையில் செயற்படும் இந்த நடவடிக்கையானது, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ரூபா 08 பில்லியன் பெறுமதியான குறைந்தபட்ச சொத்துக்களையும், ரூபா 01 பில்லியன் பிரதான மூலதனத்தையும் 2016 ஜனவரி முதல் 2018 ஜனவரி வரையில் ரூபா 1.5 பில்லியன் வரை அதிகரிக்கும் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்கிறது.

செப்டம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டிற்கான குறித்த நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை உற்றுநோக்குகையில், AMF நிறுவனத்திடம் ரூபா 3.38 பில்லியன் பெறுமதியான சொத்துக்களும், ஆர்பிகோ பினான்ஸ் நிறுவனத்திடம் ரூபா 5.18 பில்லியன் பெறுமதியான சொத்துக்களும் காணப்பட்டன. நிறுவன பங்கு விலைகள் ஒவ்வொன்றும் முறையே ரூபா 150 மற்றும் ரூபா 99.53 ஆகக் காணப்பட்டன. AMF நிறுவனத்தின் ரூபா 840.47 மில்லியன் பிரதான மூலதனமாகவும், ஆர்பிகோ பினான்ஸ் நிறுவனத்திடம் ரூபா 740.28 மில்லியன் பிரதான மூலதனமாகவும் இருந்தன.

நிறுவனங்களின் இணைப்பு காரணமாக, ஒன்றிணைப்புச் செயற்பாட்டின் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. ஆர்பிகோ பினான்ஸ் காலாண்டுக்கான வட்டி வருமானமாக 127.12 மில்லியன் ரூபாவைப் பதிவு செய்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதில் 22% அதிகரிப்பு காணப்படுகின்றது. நிகர இலாபம் ரூபா 28.49 மில்லியன் ஆகும். சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% அதிகரிப்பைப் பெற்றுள்ளது. AMF 100.31 மில்லியன் ரூபாவை வட்டி வருமானமாக பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 3% வளர்ச்சியாகும். நிகர இலாபம் ரூபா 23.61 மில்லியனாக இருந்தது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37% வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையின் இரண்டாவது மிகப் பழைய நிதி நிறுவனமான ஆர்பிகோ பினான்ஸ், றிச்சர்ட் பீரிசினால் 1951 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் ஐந்தாவது மிகப்பழைய நிதி நிறுவனம் இதுவாகும்.