Loading... Please wait.

எம்மைப் பற்றி

உங்களது வளர்ச்சியையும், உங்கள் ஒவ்வொரு முன்னோக்கிய காலடியையும், வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்லும் ஆர்பிகோ பினான்ஸூடன் உங்களது பயணத்தை ஆரம்பிக்கலாம். உங்கள் வாழ்வில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திட நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகினறோம்.

http://www.arpicofinance.com/wp-content/uploads/2015/10/mision-1200x789.jpg

எமது தொலைநோக்கு


 உன்னதமான சேவை



எமது செயற்பாடு


உன்னதமான சேவை மற்றும் பெறுமதி சேர்ப்பின் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு மிகப் பிடித்தமான நிதி நிறுவனமாகத் திகழ்வது


http://www.arpicofinance.com/wp-content/uploads/2015/10/61_2933826.jpg
http://www.arpicofinance.com/wp-content/uploads/2015/06/asa-1200x675.jpg

பெறுமதிகள்


எமது அன்றாட வர்த்தக நடவடிக்கைகளில் கிரமமாகச் செயற்பட்டு, ஆக்கபூர்வமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து, நம்பிக்கை மற்றும் பரஸ்பர கௌரவம் மற்றும் நேர்மையுடன் பணியாற்றுதல்

ஒவ்வொரு தனி நபரும், நிதி ரீதியாக, சிறப்பாக வளர்ச்சியடைவதன் மூலம், நிலையான ஒரு பொருளாதாரத்தை உருவாக்கிட முடியும் என்பதே எமது நம்பிக்கையாகும். ஆர்பிகோ பினான்ஸ் ஆகிய நாம், வாடிக்கையாளர்களின் தேவைப்பாடுகளுக்கு நம்பிக்கை மற்றும் கௌரவத்துடன் உரிய நேரத்தில் மிகச்சிறந்த நிதித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் அதனைப் பூர்த்தி செய்ய ஈடுபாட்டுடன் தயாராக இருக்கினறோம்


வரலாறு

ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி – 65 வருட கால நிதித்துறை அனுபவத்தைக் கொண்டுள்ளது


65 வருட கால அயராத குழும வரலாற்றைக் கொண்டுள்ள ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி சிறந்த வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அது, கடந்த 6 தசாப்த காலத்தில் நிதித்துறையில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. 1951 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்பிகோ பினான்ஸ் நிறுவனமானது, இலங்கையில் இரண்டாவது மிகப்பழைய ஒரு நிதி நிறுவனமாகும்.

இலங்கையின் நிதித்துறை வரலாற்றில் சிறந்த வளர்ச்சி கண்ட இந்த நிதி நிறுவனத்தை 1967 இல் உரிமையாளர்கள் மற்றொரு பங்குதாரர்களின் கைகளில் ஒப்படைத்து, தமது பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளனர். அந்தப் பங்குதாரர்களில் ஏஷியன் பினான்ஸ் கம்பனி லிமிட்டெட் பிரதானமாகும்.

அதன் பிரதான செயற்பாடுகளாக இருந்த குத்தகை மற்றும் வாகனங்களின் வாடகைக் கொள்வனவு ஆகியவற்றில் இருந்து மேலும் பல புதிய வர்த்தக நடவடிக்கைகளுக்குச் சென்ற ஆர்பிகோ பினான்ஸ் நிறுவனம், இப்போது, சர்வதேச நிதி நடவடிக்கைகள், சொத்து விற்பனை போன்ற செயற்பாடுகள் என்பனவற்றிலும் அதன் புதிய உரிமையாளர்களின் வழிநடத்தலில் ஈடுபட்டு வருகின்றது.

ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி நிறுவனமானது, ஒரு பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனமாகும். இது, இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரத்தின்படி, நிறுவனத்திற்கு பொது மக்களிடம் இருந்து வைப்புக்களைப் பெற்றுக் கொள்ளவும், சேமிப்புக் கணக்குகளை ஆரம்பிக்கவும் அண்மைக்கால சட்டங்களின் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. நிறுவனமானது, பல்வேறுபட்ட சட்ட திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான நிபந்தனைகளின் மூலம் கட்டுப்பாட்டுடன் செயற்பட்டு வருவதோடு, சகல வித நியாயமான தராதரங்களைப் பேணவும், அதன் மாசடையாத வரலாற்றைப் பாதுகாக்கவும், சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.

கடந்த வருடங்களில் நிறுவனம் சிறந்த இலாபத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதன் வர்த்தக நடவடிக்கைகள், துரிதமான வளர்ச்சிக்குத் தேவையான முறையில் மீளமைக்கப்பட்டு, கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க வருமான வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டுள்ளது.


எம்மைப் பற்றி

V3

உங்களது வளர்ச்சியை மேலும் ஸ்திரப்படுத்தும் ஒவ்வொரு கட்டத்திலும், உங்களது வளர்ச்சிக்கு ஆர்பிகோ பினான்ஸ் இணைந்து செயற்பட்டு, உங்களுக்குத் துணைபுரிய நாம் எமது திடமான நிதிச் செயற்பாடுகளுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்

தலைமை அலுவலகம்